தென்னிலங்கையில் வலுக்கும் எதிர்ப்பு - கோட்டாபயவை கடுமையாக சாடிய பௌத்த தேரர்
பௌத்த தேரர் ஒருவர் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் கோட்டாபயவை கடுமையாக சாடியுள்ளார்.
கோட்டாபய நாட்டிற்கும் மக்களிற்கும் துரோக இழைத்தார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச முன்னிலையில் உரையாற்றிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரரே இவ்வாறு கடுமையான குற்றஞ்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
தவறான பாதையில் கோட்டாபய
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கோட்டபயவிடம் நிர்வாகத் திறமையிருக்கவில்லை தனக்கு யாரால் நன்மை கிடைக்கும் என கருதினாரோ அவர்களையே கோட்டாபய தன்னை சுற்றி வைத்திருந்தார்.

கோட்டாபய தவறான பாதையில் செல்கின்றார் என நாங்கள் பல தடவை அவரிடம் தெரிவித்தோம். அதன் காரணமாகவே அவர் வீழ்ச்சியடைந்தார்.
நாங்கள் இன்று எதிர்கொள்ளும் நிலைமைக்கு அவரின் நிர்வாகத்திறன் இன்மையே காரணம் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 16 மணி நேரம் முன்
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri