வட மாகாண விகாரைகளுக்கு புத்தர் சிலைகள் வழங்க நடவடிக்கை
ஜனாதிபதியின் பதவியேற்பு தினத்தை முன்னிட்டு வட மாகாணத்திலுள்ள விகாரைகளுக்கு புத்தர் சிலைகள் வழங்க நவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை யாழ்ப்பாணம், பருத்திதுறை, காரைநகர், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்ட அனைத்து சாலை முகாமையாளர்களுக்கும், வட மாகாண பொதுஜன பெரமுன தொழிற்சங்க இணைப்பாளர்களுக்கும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வடக்கு இ.போ.ச பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 18.11.2021அன்று ஜனாதிபதியின் பதவியேற்பு தினத்தையொட்டி ஒரு சாலைக்கு ரூபா 50,000 பெறுமதியான புத்தர் சிலைகளை அருகில் உள்ள விகாரைகளுக்கு வழங்குவதற்கும், அதற்கான செலவுகளை அந்தந்த சாலை ஊழியர்சங்க உறுப்பினர்களே பொறுப்பேற்க வேண்டுமெனவும் இலங்கை போக்குவரத்து சபை தலைவரினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த விடயம் தொடர்பாக மேலதிக தகவல்கள் தேவைப்பட்டால் தன்னுடனோ அல்லது வட மாகாண பொதுஜன பெரமுன போக்குவரத்து ஊழியர்சங்க இணைப்பாளர் இளஞ்செல்வனுடன் தொடர்பு கொள்ளலாம் என வடக்கு இலங்கை போக்குவரத்து சபை பிரதான பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.






நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
