பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை
பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்கொடை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
அங்கொடை, அக்கொன பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.
தகராறு
குறித்த பெண்ணுக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் நபருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான பெண் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விசாரணையில் தெரியவந்த விடயம்
எதிர் வீட்டில் வசிக்கும் நபரும், கொலை செய்யப்பட்ட பெண்ணும் ஒரே நிறுவனத்தில் பணியாளர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து எதிர் வீட்டில் வசிக்கும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வெங்கட் பிரபு படத்திற்காக சம்பளத்தை குறைத்துக் கொண்டாரா நடிகர் சிவகார்த்திகேயன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam