மரண வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறு - ஒருவர் பலி - ஒருவர் காயம்
மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருமட பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு, 2 பேர் காயமடைந்த நிலையில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 35 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காயமடைந்த மற்றொரு நபர் மஹியங்கனை, சொரபோர பகுதியை சேர்ந்த 20 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப தகராறு
உயிரிழந்தவரின் உறவுக்கார சகோதரியின் இறுதிச் சடங்கின் போது ஏற்பட்ட குடும்ப தகராறின் விளைவாக இந்தக் கொலை நடந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலையுடன் தொடர்புடைய 45 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
