மட்டக்களப்பில் தம்பியிமிருந்து கடன் வாங்கிய அண்ணனுக்கு நேர்ந்த விபரீதம்
மட்டக்களப்பு தலைநகர் பகுதியில் கடன் பிரச்சினையின் போது மூத்த சகோதரனை இளைய சகோதரன் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்றையதினம் (14.06.2023) பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மூத்த சகோதரர் மட்டு கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
தனது காணியை கடந்த 17 வருடங்களுக்கு முன்னர் விற்று அந்த பணத்தில் 6 அரை இலச்சம் ரூபாவை மூத்த சகோதரனுக்கு கடனாக வழங்கிய நிலையில் மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்று கடந்த 2 மாதங்களக்கு முன்னர் திரும்பி வந்துள்ளார்.
முற்றிய வாய்த்தர்க்கம்
இந்த நிலையில் கொடுத்த கடனை கேட்டு சகோதரனின் வீட்டுக்கு சென்றபோது வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட சகோதரன், சகோதரி, சகோதரியின் கணவர் மற்றும் அவர்களது மகள் ஆகியோர் சேர்ந்து கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியுள்ளர்.
இந்நிலையில் மூத்த சகோதரர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் தாக்குதலை மேற்கொண்ட இரு பெண்கள் உட்பட நால்வரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
