சுவரில் மோதி தலையை உடைத்த கைதி: வைத்தியசாலையில் அனுமதி
மட்டக்களப்பில் கஞசாவுடன் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய கூண்டில் கஞ்சா வியாபரி ஒருவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது கூண்டிலுள்ள சுவருடன் தனது தலையை மோதி உடைத்ததையடுத்து அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று(02.11.2022) இரவு இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் சுற்றி வளைப்பு
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய சம்பவதினமான நேற்று மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய சுற்றுச் சூழல் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கஜநாயக்கா தலைமையில் பொலிஸ் அதிகாரி ரி.கிருபா உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் கருவப்பங்கேணியிலுள்ள வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது அங்கு 78 ஆயிரம் மில்லிக்கிராம் கஞ்சாவுடன் 21 வயதுடைய கஞ்சா வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலைய கூண்டில் அடைத்து வைத்து விசாரணையின் பின்னர் இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
இந்த நிலையில் குறித்த கஞ்சா வியாபாரி அடைக்கப்பட்ட கூண்டில் உள்ள சுவருடன் தனது தலையை மோதி உடைத்துள்ளார்.
இதனையடுத்து அவரை அங்கிருந்து மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பொலிஸ் நிலைய கூண்டில் தடயங்களை பெறுவதற்காக தடயவியல் பிரிவு
பொலிஸார் அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 19 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
