அரசுக்கு எதிரானவர்களை நசுக்கும் சட்டமாக மாறிய பயங்கரவாத தடைச் சட்டம்:அப்துல் ரகுமான்(Video)
நாட்டை பாதுகாக்க கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் பல அப்பாவி பொதுமக்களின் வாழ்க்கையை நாசமாக்கியுள்ளது என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முன்னாள் தவிசாளரும் பிரதி தலைவருமான பொறியலாளர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் விசேட ஊடக மாநாடு மட்டக்களப்பில் உள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் நேற்று(02.11.2022) இடம்பெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டம்
மேலும் கூறுகையில்,“பயங்கரவாத தடைச் சட்டம் தமிழ் மக்களை நசுக்குவதற்காக பயன்படுத்தப்பட்டு பின்னர் முஸ்லிம் மக்களின் உரிமையை நசுக்குவதற்காக பாவிக்கப்பட்டு.
இப்போது அரசுக்கு எதிரா பேசுகின்ற அத்தனை பேரின் குரல்களை நசுக்குவதற்கு ஒரு சட்டமாக மாற்றப்பட்டுள்ளது எனவே இது நீக்கப்பட வேண்டும்.
தற்போது நாட்டின் நிலமை எல்லோருக்கும் தெரியும். அனைத்தும் படுமோசமாகவுள்ளது. இக்கட்டான காலகட்டத்தில் இருக்கின்றோம். இந்த நிலமைக்கு காரணம் என்ன என்பதை எல்லோருக்கும் புரிந்துள்ளது.
அரசியல் அக்கறைகாட்டாமல் அதனை உதாசீனம் செய்தால் எமது அன்றாட வாழ்க்கையில் என்ன நடக்கும் எமது அடிவயிற்றை எப்படி தாக்கும் என்பதை இன்று எல்லோரும் உணர்ந்துள்ளனர்.
அதன் பிரதிபலிப்பாக கடந்த காலத்தில் மக்கள் புரட்சியாக மக்கள் போராடிய போராட்டமாக கண்டோம். ஊழல் மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ஒரு சில மாற்றங்களும் நடந்தது. மக்கள் போராட்டத்தினால் ஜனாதிதியாக வந்த ரணில் விக்ரமசிங்க அதனை மறந்துவிட்டு மக்களை வீதிக்கு கொண்டு வந்த பழைய ஆட்சி முறைமாயை கொண்டு வந்தவர்களை பாதுகாத்து அவர்களை வளர்த்துக் கொண்டு எந்த போராட்டித்தின் ஊடாக பதவி கிடைத்ததோ அந்த போராட்டத்தை செய்த மக்களை பழிவாங்குகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.
பல யாப்பு திருத்தங்கள்
18 வது திருத்தம் ராஜபக்ச குடும்பத்தை நிரந்தரமாக ஆட்சியில் வைப்பதற்காக கொண்டுவரப்பட்ட திருத்தம் அதற்கு கை உயர்தினார்கள் அதிலே பாவம் செய்துவிட்டோம் என 19 திருத்தத்திற்கு கை உயர்தினார்கள்.
பினனர் 19 கை உயர்தினவர்கள் 20 கொண்டுவந்தனர் இப்போது 22 செய்துள்ளனர். பல யாப்பு திருந்தங்கள் செய்தனர் எந்த திருத்தமும் நாட்டைநல்ல நிலமைக்கு கொண்டு போனதற்கான ஆதாரத்தை காணவில்லை.
இப்போது உள்ள நாடாளுமன்றம் அரசாங்கம் மக்கள் ஏற்கனவே வழங்கிய ஆணையை இழந்துவிட்ட அரசாங்கம். எனவே தேர்தல் ஒன்று உடன் நடைபெற வேண்டும்.
ரணில் கட்சி கடந்த தேர்தலில் எந்த இடத்திலும் வெல்ல முடியாது தோல்வியடைந்தது. இப்போது கிடைத்திருக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி கட்சியை பலப்படுத்தி தள்ளிப் போடும் நிலவரத்தை நாம் கண்டிக்கின்றோம்.
பொருளாதார நெருக்கடி
இன்றை நிலவரத்தின்படி அந்நிய செலவணியின் கையிருப்பு 1.7 மில்லியன் இந்த பணத்தில் ஒரு சத வீதத்தை கூட பாவிக்க முடியாது. எனவே 700 மில்லியனை வைத்துக் கொண்டு நாடு தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்றது.
இதனால் உற்பத்திகளுக்கான மூலப் பொருட்களை இறக்க முடியாத கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் எந்த பணமும் வராது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும்போது பெரும் கம்பனிகளுக்கு வரிச்சலுகை கொடுத்தார். அதனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
எனவே வரிச்சலுகை கொடுக்கப்பட்ட கம்பனிகள் தான் இந்த சுமையை தாங்க வேண்டும் பொதுமக்கள் அல்ல. அத்துடன் நிலையான பொருளாதார தீர்வு வந்தால் தான் இந்த நாடு மீள் எழும்.
காணாமல்போனோர் தொடர்பாக காலத்துக்கு காலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
ஆனால் ஏற்கனவே ஜனாதிபதி நியமிக்கும் ஆணைக்குழு ஒரு அறிக்கையை தயாரிக்கும் அந்த அறிக்கை சரியா பிழையா என பார்ப்பதற்கு இன்னும் ஒரு குழுவரும் அதை மீண்டும் பரிசீலிப்பதற்கு இன்னும் ஒரு குழுவரும். இதில் மக்கள் எதிர்பார்க்கின்ற நீதியே நியாயமே கிடைக்கவில்லை.
எனவே இது தொடர்ந்தும் கண்துடைப்பு நடவடிக்கையாக இருந்து விடக்கூடாது. காணாமல் போனோர் தொடர்பாக சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் தகவல்கள் போதுமானதாக உள்ளது.
எனவே இதில் புதிதாக சேகரிப்பதற்கு ஒன்றும் இல்லை ஆகவே மக்கள் எதிர்பார்க்கின்ற அந்த நிவாரணமான நீதியையும் நியாயத்தையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக கொடுத்தாக வேண்டும்.”என கூறியுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 19 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
