தீவொன்றுக்கு சுற்றுலாவுக்கு சென்ற பிரித்தானிய பெண்களுக்கு நேர்ந்த கதி
ஸ்பெயின்- இபிஸா தீவிற்கு சுற்றுலாவுக்கு சென்ற இளம்பெண்கள் இருவர் விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில்,பிரித்தானியாவைச் சேர்ந்த 26, 27 வயது பெண்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த பெண்கள் இருவரும் ஸ்பெயினின் இபிஸா (Ibiza) தீவுக்கு சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, வாகனம் ஒன்று மோதியதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்கள் இருவருக்கும் மூளையில் காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டதால், அவர்களது நிலைமை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில் 24 வயது நபர் ஒருவர் இயக்கிய வாகனத்தால் அப்பெண்கள் விபத்தில் சிக்கியதாக தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



