பிரித்தானிய பெண்ணின் தங்க ஆபரணங்கள் கொள்ளை
பிரித்தானிய பெண்ணொருவர் கொள்வனவு செய்த 18 ஆயிரத்து 500 ஸ்டேர்லிங் பவுண் பெறுமதியான தங்க வலையல், காதணி உட்பட ஆபரண தொகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த பிரித்தானிய பெண்
களுத்துறை வடக்கில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த பிரித்தானிய பெண்ணான லின்டா பிரவ்மன் என்ற பெண் இந்த முறைப்பாட்டை நேற்று இரவு செய்துள்ளார்.
முறைப்பாட்டாளரான பிரித்தானிய பெண் சுற்றுலா விடுதியில் இருந்து முச்சக்கர வண்டியில் அளுத்கம பிரதேசத்திற்கு சென்று பிரதான நகைக்கடை ஒன்றில் தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்துள்ளார்.
பிரித்தானிய பெண் தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்தமை தொடர்பில் இரண்டு சுற்றுலா வழிக்காட்டிகள் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கொள்ளையிடப்பட்டுள்ள தங்க ஆபரணங்களின் இலங்கை ரூபா பெறுமதி 83 லட்சம் ரூபாவுக்கும் மேல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
