பிரித்தானியா செல்ல முயன்றவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
துருக்கி ஊடாக பிரித்தானியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட குடியுரிமை வீசாவைப் பயன்படுத்தி குறித்த நபர் பயணிக்க முயற்சித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 57 வயதான பாகிஸ்தான் நாட்டவராகும்.

பொலிஸாரினால் தாக்கப்பட்டு உயிரிழந்த யாழ். இளைஞன் : ஐரோப்பா வாழ் சித்தங்கேணி மக்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
போலி ஆவணம்
நேற்று பிற்பகல் 05.00 மணியளவில் பஹ்ரைன் நோக்கிப் புறப்படவிருந்த Gulf Air விமானமான GF-145இல் பயணிப்பதற்காக இந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
அவர் வளைகுடா விமான நிறுவன அதிகாரிகளிடம் கையளித்த ஆவணங்களில், பிரித்தானியாவில் வழங்கப்பட்ட நிரந்தர வதிவிட விசா மீதான சந்தேகம் காரணமாக, அவர் குடிவரவு எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகளிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அங்கு நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் இந்த நிரந்தர வதிவிட விசா மோசடியான முறையில் தயாரிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது..
குறித்த பாகிஸ்தானியர் 2020ஆம் ஆண்டு வரை இங்கிலாந்தில் வசித்து வந்த நிலையில், அதன் பின்னரே அவர் பாகிஸ்தானுக்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குடியுரிமை விசா
அதன் பின்னர், தனது நண்பர் மூலம் மோசடியான முறையில் குடியுரிமை விசாவை தயாரித்து பெற்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வதிவிட விசா மூலம் ஒகஸ்ட் 10 ஆம் திகதி சுற்றுலா விசாவில் இலங்கை வந்த பாகிஸ்தான் பிரஜை, கட்டுநாயக்காவில் இருந்து நேற்று மதியம் பஹ்ரைன் சென்று பின்னர் துருக்கியின் இஸ்தான்புல் ஊடாக பிரித்தானியாவு்ககு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளார்.
இந்த பாகிஸ்தான் பிரஜையை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
