இலங்கையின் இனப்படுகொலை நினைவேந்தலுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய பிரித்தானிய அரசியல்வாதிகள்
இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போரின் போது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழியங்களுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதி வழங்கப்பட வேண்டும் என முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவு நாளில் பிரித்தானிய அரசியல்வாதிகள் குரல் எழுப்பியுள்ளனர்.
இலங்கைத் தீவில் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் பிரித்தானிய கவனம் செலுத்தி வருவதோடு "தங்கள் அன்புக்குரியவர்களை சுதந்திரமாக நினைவுகூர" அனுமதிக்கும் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை பிரித்தானியா ஆதரிப்பதாக வெளியுறவு செயலாளர் டேவிட் கேமருன் (David Cameron) குறிப்பிட்டுள்ளார்.
அர்த்தமுள்ள விசாரணை
எனினும், 2013இல் இலங்கையின் வடக்குப் பகுதிக்கு விஜயம் செய்தபோது அங்கு உண்மை, நீதி மற்றும் அனைவருக்கும் பொறுப்புக்கூறலை பிரித்தானியா ஆதரிக்கும் என்று தாம் உறுதியளித்ததாக கேமருன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தமிழர்களுக்கான நீதியை உறுதி செய்வதில் இங்கிலாந்து தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று பிரித்தானியாவின் டிஜிட்டல், கலாசாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத்துறையின் பிரதி அரச செயலாளர் தங்கம் டெப்போனயர் (Thangam Debbonaire) கோரியுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நாளில், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துவதாக தங்கம் டெப்போனயர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மோதல்கள் முடிவடைந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாகிறது, ஆனால் இலங்கை அரசாங்கம் எந்தவொரு அர்த்தமுள்ள விசாரணையையும் மேற்கொள்ளவில்லை.
இத்துடன் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்க சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய உத்தரவாதங்களை நிறைவேற்றவும் அது தவறிவிட்டது என்றும் தங்கம் டெப்போனயர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 2ஆம் நாள் - திருவிழா





என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
