பிரித்தானிய மக்களுக்கு கூடுதல் பணம் வழங்கப்படும் - ரிஷி சுனக் புதிய வாக்குறுதி
பிரித்தானியாவின் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் ஏழைகளுக்கு நிதி உதவி செய்வதாக பிரதமர் போட்டியாளர் ரிஷி சுனக் வாக்குறுதி அளித்துள்ளார்.
முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக், பிரித்தானியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அதிகரித்து வரும் வீட்டு எரிசக்தி கட்டணங்களைச் சமாளிக்க மக்களுக்கு உதவ கூடுதல் பணம் வழங்குவதாக உறுதியளித்தார்.
கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைத் தேர்தலில் இறுதிப் போட்டியாளராக இருக்கும் 42 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், கடன் வாங்குவதைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில், அரசாங்கத்தின் "Efficiency savings" மூலமாக மக்களுக்கு நிதியளிக்க உறுதியளித்தார்.
Efficiency savings என்பது, எந்தவொரு நிதியாண்டிலும் ஒரு நகரத் துறை அல்லது ஏஜென்சியின் செலவினங்களைக் குறைப்பதன் காரணமாக, 18-75 பிரிவின் கீழ் ஊக்கத் தொகைகளுக்குக் கிடைக்கும் பணமாகும்.
எரிசக்தி ஆலோசனை நிறுவனமான கார்ன்வால் இன்சைட் வழங்கிய முன்னறிவிப்பின்படி, பிரித்தானியாவில் இந்த குளிர்காலத்தில் வீட்டு வெப்பமூட்டும் பில்கள் முன்பு கணித்ததை விட மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.