இலங்கையில் 25 வருடங்களின் பின்னர் நிறைவேற்றப்பட்ட பிரித்தானிய கடற்படை அதிகாரியின் இறுதி ஆசை
பிரித்தானிய கடற்படை அதிகாரி ஒருவரின் அஸ்தியை இலங்கையில் உள்ள மூலோபாய தளத்தில் கரைக்கவேண்டும் என்ற இறக்கும் முன்னதாக அவரின் விருப்பம், அவர் இறந்து 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.
லெப்டினன்ட் நோர்மன் ஸ்கோஃபீல்ட் திருகோணமலையில் தகவல் தொடர்பு அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
இந்த பதவி, இரண்டாம் உலகப் போரின் போது, இலங்கை நாட்டின் கிழக்குக் கடற்கரையில் நேச நாட்டுப் படைகளுக்கு ஒரு முக்கிய பதவியாக கருதப்பட்டுள்ளது. எனினும், தமது ஸ்கோஃபீல்டின் விருப்பம் அதிகாரத்துவ தடைகளால் தாமதிக்கப்பட்டுள்ளது.
சாம்பலைச் தூவும் நடைமுறை
இலங்கையில் சாம்பலைச் தூவும் நடைமுறையை நாடு தடைசெய்துள்ளதால் அதற்கு இடமளிக்க முடியவில்லை என்று இலங்கையின் கடற்படை தெரிவித்துவந்தது.
எனினும், இராஜதந்திர வழிகள் மூலம் கோரிக்கைகளைத் தொடர்ந்து, அதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அவரது மனைவியான மேரியின் அஸ்தியும் கடந்த வெள்ளிக்கிழமை(27) திருகோணமலையில் ஒன்றாக இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 14 இலங்கையின் கடற்படை உறுப்பினர்களின் மரியாதையுடன் பிரித்தானிய அதிகாரி மற்றும் அவரின் மனைவி ஆகியோரின் அஸ்திகள், திருகோணமலை கடற்படை கப்பல்துறையின் ஒஸ்டன்பேர்க் முனைக்கு அருகில் கடலில் கரைக்கப்பட்டுள்ளது.
குறித்த இடம் முன்னதாக பிரித்தானிய அதிகாரியின் இதயத்திற்கு மிகவும் பிடித்த இடம் என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
பிரித்தானிய இராஜதந்திரி டேரன் வூட்ஸடன் கடற்படைத் தளபதி பிரியந்த பெரேராவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.
ஸ்கோஃபீல்ட் 1957 இல் திருகோணமலையில் பணியாற்றினார், அப்போது திருகோணமலை துறைமுகம் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து அப்போதைய இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டிருந்தது.





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
