ஈரானில் ஆறு வருடங்களின் சிறைவாசம்! - பிரித்தானியா வரும் ஜகாரி-ராட்க்ளிஃப்
பிரிட்டிஷ்-ஈரானிய கைதியான நசானின் ஜாகரி-ராட்க்ளிஃப் மற்றும் Anoosheh Ashoori ஆகிய இருவரும் பல வருடங்களாக ஈரானிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிரித்தானியா திரும்புகின்றனர்.
வெளியுறவு செயலர் லிஸ் ட்ரஸ் இதனை உறுதிப்படுதியுள்ளார்.
குறித்த இருவரும் ஏற்கனவே ஓமன் வந்துவிட்டதாகவும், அங்கிருந்து அவர்கள் பிரித்தானியாவிற்கு விமானத்தில் ஏறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமேற்கு லண்டனில் உள்ள ஹாம்ப்ஸ்டெட்டைச் சேர்ந்த ஜகாரி-ராட்க்ளிஃப், ஈரானிய அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்த குற்றச்சாட்டின் பேரில் 2016 இல் கைது செய்யப்பட்டதிலிருந்து தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
ஓய்வுபெற்ற சிவில் பொறியியலாளரான அஷூரி, 2017 இல் ஈரானில் தனது தாயைப் பார்க்கச் சென்றபோது உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
Nazanin and Anoosheh have arrived safely in Oman. Sincere thanks for the hard work and good faith in Tehran and London that made this possible. Soon they will be with their loved ones at home. We hope this result will bring further progress in the dialogue between the parties. pic.twitter.com/u5qDQ4sgHC
— Badr Albusaidi - بدر البوسعيدي (@badralbusaidi) March 16, 2022
இந்நிலையில், குறித்த இருவரும் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரித்தானியா திரும்புகின்றனர். இது குறித்து வெளியுறவு செயலர் லிஸ் ட்ரஸ் கருத்து வெளியிடுகையில்,
“குறித்த இருவரின் விடுதலை தொடர்பில் முழு நாடும் மகிழ்ச்சியடையும். அவர்களின் விடுதலையானது பல ஆண்டுகளாக நீடித்த பிரிட்டிஷ் இராஜதந்திரத்தின் விளைவாகும்.
இவர்களின் குடும்பத்தினர் அனுபவித்த வேதனை இனி யாருக்கும் ஏற்படக் கூடாது. இன்னும் சில மணி நேரங்களில் அவர்கள் பிரித்தானியா வருவார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
It's been 6 long years - and I can't believe I can FINALLY share this photo.
— Tulip Siddiq (@TulipSiddiq) March 16, 2022
Nazanin is now in the air flying away from 6 years of hell in Iran.
My heart goes out to Gabriella and Richard, as her long journey back home to them gets closer by the minute.#NazaninIsFree ❤️ pic.twitter.com/BzEEBP840C