இந்தியாவில் அவசரமாக தரை இறங்கிய இங்கிலாந்து விமானம்
இங்கிலாந்தின்(UK) எப்-35 போர் விமானம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(14) இரவு இடம்பெற்றுள்ளது.
அவரசமாக தரையிறக்கம்
இரவு சுமார் 9.30 மணிக்கு பாதுகாப்பாக தரையிறங்கியதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த விமானம் நடுவானில் பறந்த போது எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டதால், அவரசமாக தரை இறக்க விமானி அனுமதி கேட்டுள்ளார்.
விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக அவசரநிலை அறிவித்து, விமானம் பாதுகாப்பாக தரையிறங்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
போர்விமானம் விமானம்
தற்போது, அந்த போர்விமானம் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசிடமிருந்து எரிபொருள் நிரப்ப அனுமதி எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றையதினம் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் - கவுரிகுந்த் அருகே இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
புடின் - ட்ரம்ப் சந்திப்பு தேவை இல்லை... உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா முன்வைக்கும் யோசனை News Lankasri