வடக்கு ஆளுநருக்கும் பிரித்தானிய தூதரகத்தின் பிரதிநிதிக்குமிடையில் சந்திப்பு

Government Of Sri Lanka United Kingdom India Northern Province of Sri Lanka
By Kajinthan Dec 11, 2024 04:29 AM GMT
Report

இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் (N.vedhanayagan) பிரித்தானிய தூதரகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைகளுக்கான முதனிலைச் செயலர் ஹென்றி டொனைட்டிடம் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று(10) காலை இடம்பெற்ற சந்திப்பின்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமைக்கு முதலில் வாழ்த்துக்களைத் தெரிவித்த ஹென்றி டொனைட், வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அறிவதே  தனது பயணத்தின் நோக்கம் என இதன்போது கூறியுள்ளார்.

வடிவேல் சுரேஷை வெளியேற்ற உத்தரவு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வடிவேல் சுரேஷை வெளியேற்ற உத்தரவு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

காணிகள் விடுவிப்பு

வடக்கு மாகாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரிடமிருந்து இன்னமும் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும், குறிப்பாக மக்களின் காணிகள் கடந்த காலங்களில் அவர்கள் இடம்பெயர்ந்திருந்த சந்தர்ப்பங்களில் வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் தமது ஆளுகைக்கு உட்பட்டதாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டமையால் தற்போது சிக்கல் நிலைமைகள் ஏற்பட்டுள்ளது என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு ஆளுநருக்கும் பிரித்தானிய தூதரகத்தின் பிரதிநிதிக்குமிடையில் சந்திப்பு | British Embassy Rep Visits Northern Governor

விவசாயிகள் வாழ்வாதாரம் இதனால் கடுமையான பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது என்று குறிப்பிட்ட ஆளுநர், வடக்கு மாகாண  மக்களின் முக்கியமான பிரச்சினையாக இது உள்ளது எனவும் தெரிவித்தார். 

கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட சில வீட்டுத் திட்டங்கள் இடைநடுவில் இருப்பதால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் எனவும் அவை விரைவில் பூர்த்தியாக்கப்பட வேண்டிய தேவை உள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

வலி. வடக்கில் பாதுகாப்புத் தரப்பினர் வசம் நீண்ட காலம் இருந்த வீதி மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டமை சிறந்த நடவடிக்கை எனக் குறிப்பிட்ட ஆளுநர், மேலும்  மக்கள் வீதிகளை, காணிகளை விடுவிக்கக் கோருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பாதுகாப்புத் தரப்பினரால் ஏற்படுத்தப்பட்டிருந்த சோதனைச் சாவடிகள் மற்றும் வீதித் தடைகள் என்பன அகற்றப்பட்டுள்ளன என்பதையும் ஆளுநர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பிரச்சினை : விரைவில் சஜித் வெளியிடவுள்ள பெயர் விபரங்கள்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பிரச்சினை : விரைவில் சஜித் வெளியிடவுள்ள பெயர் விபரங்கள்

முதலீட்டாளர்கள் மாநாடு

தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளமையால் அதிகளவில் வருகின்றனர் எனக் குறிப்பிட்ட ஆளுநர் அடுத்த ஆண்டு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

வடக்கு ஆளுநருக்கும் பிரித்தானிய தூதரகத்தின் பிரதிநிதிக்குமிடையில் சந்திப்பு | British Embassy Rep Visits Northern Governor

மேலும் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையிலும் இளையோருக்கான வேலைவாய்ப்புக்களை வழங்கும் நோக்கிலும் பலாலியிலுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கப்படவுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பொதிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் விரைவில் அதற்கும் சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் தமிழகத்தில் அண்ணளவாக ஒரு லட்சம் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர் எனவும் அவர்கள் நாடு திரும்பினால் அவர்களுக்குரிய வாழ்வாதார, வதிவிட உதவிகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தின் பிரதான வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டபோதும் உள்ளக வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவில்லை என்று குறிப்பிட்ட ஆளுநர் அவற்றை எதிர்காலத்தில் விரைந்து அபிவிருத்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும், தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலேயே அபிவிருத்திகளைச் செய்து முடிக்கலாம் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, ஐ.நா. முகவர் அமைப்புக்கள் ஊடாக பிரிட்டன்(United Kingdom) அரசாங்கம் கடந்த காலங்களில் வடக்கு மக்களுக்கு மேற்கொண்ட உதவிகளுக்கு ஆளுநர் நன்றிகளையும் தெரிவித்தார்.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

பிரித்தானியத் தூதரகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைக்கான முதன்மைச் செயலாளர் ஹென்றி டொனாடி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபனை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பானது, இன்று(11) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதேச மற்றும் ஆதார வைத்தியசாலைகளுக்கு தேவையான வைத்திய உபகரணங்களின் தேவைப்பாடுகள் உள்ளதாகவும் அதற்கான உதவிகளை வழங்குமாறும் அரசாங்க அதிபர் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

 பாதிக்கப்பட்ட மக்கள்

மேலும், இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாகவும் அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் முதன்மைச் செயலாளர் வினாவிய போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு வார காலங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் போல் எதிர்காலத்தில் ஏற்படாவண்ணமிருக்க சீரான வடிகாலமைப்பு முறைகளின் அவசியம் பற்றி தெரிவித்த அரசாங்க அதிபர், வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தினால் இது வரை ரூபா.50 மில்லியன் நிதி விடுவிக்கப்பட்டது.

வடக்கு ஆளுநருக்கும் பிரித்தானிய தூதரகத்தின் பிரதிநிதிக்குமிடையில் சந்திப்பு | British Embassy Rep Visits Northern Governor

இதில் சமைத்த உணவு வழங்கல் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் விநியோகம் என்பவற்றிற்காக ரூபா 49 மில்லியன் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், ரூபா 1 மில்லியன் உடனடி அனர்த்த தணிப்பு வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்ததுடன், எமது அரசாங்கத்திடம் மாவட்ட த்திற்கான தேவைப்பாடுகளை முன்வைத்த போது, நாம் கோரிய நிதி ஒதுக்கீட்டினை சம்பந்தப்பட்ட அமைச்சு விரைவாக விடுவித்தமையானது மகிழ்ச்சியான விடயம் எனவும் அரசாங்க அதிபரால் மேலும் தெரிவிக்கப்பட்டது.

அஸ்வெசுமத் திட்டம்

மீள்குடியேற்ற நிலவரங்கள், அஸ்வெசுமத் திட்டத்தில் பயனாளிகள் தெரிவு முறைமை, வீட்டுத் திட்டங்கள் போன்றவற்றின் விபரங்களை அரசாங்க அதிபரிடம் முதன்மைச் செயலாளர் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

வடக்கு ஆளுநருக்கும் பிரித்தானிய தூதரகத்தின் பிரதிநிதிக்குமிடையில் சந்திப்பு | British Embassy Rep Visits Northern Governor

இதன் போது, யாழ்ப்பாண மாவட்ட த்திற்கான வீடமைப்புத் திட்டத்தின் தேவைப்பாடுகளையும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டதுடன் மேலும், மீள்குடியேற்ற வேலைத் திட்டங்கள் முன்னேற்றகரமாக நடைபெற்று வருவதாகவும், நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த காணியற்ற குடும்பங்களுக்கு காணி அரசாங்கத்தின் நிதி மூலம் கொள்வனவு செய்யப்பட்டு வீடமைப்புத் திட்டமும் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நலன்புரி நிலையத்தில் மாத்திரம் இரண்டு குடும்பங்களே தங்கியிருப்பதாகவும் அவர்களுக்கும் காணிக் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இம் மாத இறுதிக்குள் அவ் ஒரேயொரு நலன்புரி நிலையமும் மூடப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு எதிரான அநுரவின் குரல் முடங்கிவிட்டதா..

பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு எதிரான அநுரவின் குரல் முடங்கிவிட்டதா..

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW          

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US