இலங்கை வந்த பிரித்தானிய பிரஜையினால் ஏற்பட்டுள்ள குழப்பம்: பொலிஸார் விசாரணை
இலங்கை வந்த பிரித்தானிய பிரஜையொருவர் செய்த பொய்யான முறைப்பாடு தொடர்பில் அலவத்துகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிரித்தானிய பிரஜையொருவர் அலவத்துகொடையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.
இதன்போது அவர் தங்கியிருந்த அறையின் கதவுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொருட்கள் திருட்டு
90,000 ரூபா பணம், 2 கைக்கடிகாரங்கள், கமரா ஆகியவை திருடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்த நிலையில், சந்தேகத்திற்குரிய பிரித்தானிய பிரஜை விசாரணைகள் தேவையற்றது எனவும், காப்புறுதி இழப்பீடு பெறுவதற்கு ஆவணம் ஒன்று போதுமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பிரித்தானிய பிரஜையின் வாக்குமூலத்தில் சந்தேகமடைந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளின் போது, அறையின் கதவுகள் உள்ளே இருந்து உடைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதனைத்தொடர்ந்து, சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டவர் பொலிஸாரை தவிர்த்துவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
