கத்திக்குத்தை தடுக்கும் டீ ஷேர்ட்- இங்கிலாந்தின் கண்டுபிடிப்பு
கத்திக்குத்து தாக்குதலில் இருந்து தப்பிக்கும் வகையிலான டீ-ஷேர்ட்டுக்களை இங்கிலாந்தை சேர்ந்த ஆயுத உற்பத்தி நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது.
இங்கிலாந்து ஆயுத உற்பத்தி பி.பி,எஸ்.எஸ் என்ற நிறுவனமே இந்த தனித்துவமான டி-ஷேர்ட்டை உருவாக்கியுள்ளது.
இது கூர்மையான கத்திகளைக் கொண்டு தாக்குதல்களில் இருந்து ஒருவரை பாதுகாக்கும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பிபிஎஸ்எஸ் குழுவின் இந்த டீ-ஷேர்ட், முதன்மையாக உடல் பாதுகாப்பு கவசமாக கருதப்படுகிறது
இந்த சிறப்பு டி-ஷர்ட்டை கார்பன் பைபரிலிருந்து தயாரிக்கப்படுகிறது, இது பருத்தி இழையை விட மிகவும் வலிமையானது.
பொதுவாக, கவசம் அல்லது துப்பாக்கி நிறுவனங்கள் சாதாரண பொதுமக்களுக்காக பாதுகாப்பு அங்கிகளை தயாரிப்பதில்லை.
இந்தநிலையில் இந்த டீ ஷேர்ட்டை தயாரித்துள்ள நிறுவனம், டீ ஷேர்ட்டின் விலை 16,000 இந்திய ரூபாவில் இருந்து ஆரம்பமாவதாக தெரிவித்துள்ளது..
இதுதொடர்பாக குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ள காணொளியில், அந்த டீ ஷேரட்டை அணிந்த ஒருவர் கூர்மையான கத்தியால் தாக்கப்படுகிறார். தாக்குதலுக்குப் பின்னர் அந்த டீ ஷேர்ட் அகற்றப்பட்டபோது, குறித்தவரின் உடலில் ஒரு கீறல் கூட காணப்படவில்லை.