இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் மன்னாரிற்கு விஜயம்(Photos)
மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் இன்று(03.09.2022) மன்னார் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இதன்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அ.ஸ்ரான்லி டிமேலுடன் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
குறித்த கலந்துரையாடலின் போது, மன்னார் மாவட்ட நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபரினால் விளக்கமளிக்கப்பட்டதுடன் அரசாங்கத்தினால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் மாவட்ட மக்களுக்கு தேவைப்பாடாக உள்ள விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நிலையான வாழ்வாதார வழிவகைகள்
அத்துடன் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல், நிலையான வாழ்வாதார வழிவகைகள் மற்றும் கிராம மட்ட உட்கட்டமைப்பு விடயங்கள் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதம உள்ளக கணக்காய்வாளர் மூவரும் கலந்துகொண்டுள்ளனர்.