இலங்கையில் ஊழல் - மோசடிகளை தடுக்க உதவும் பிரித்தானியா
இலங்கையில் ஊழல் மற்றும் மோசடிகளை தடுப்பதற்கு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவுடன் நேற்று (10.07.2024) நடத்திய சந்திப்பின் போது, பிரித்தானிய உயர்ஸ்தானிகர், இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் ஆட்சியை மேலும் மேம்படுத்தும் வகையில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரித்தானிய நாடாளுமன்ற முறைமை குறித்து தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் இதன்போது முன்மொழிந்துள்ளார்.
உள்ளூர் அரசாங்க அமைப்பு
பிரித்தானிய உள்ளூர் அரசாங்க அமைப்பு, மோசடி மற்றும் ஊழலைக் குறைக்கும் திறனைக் கொண்டுள்ளமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச வருவாயை அதிகரிக்கும் அதே வேளையில் மோசடி மற்றும் ஊழலை எதிர்ப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
