வீடு வீடாக சென்று கலவரக்காரர்களை கைது செய்யும் பிரித்தானிய பொலிஸார்
பிரித்தானியா (Britian) முழுவதும் போராட்டங்களும் கலவரங்களும் வெடித்து வரும் நிலையில் கலவரக்காரர்களை வீடு வீடாக சென்று பிரித்தானிய பொலிஸார் கைது செய்து வருகின்றனர்.
சௌத்போர்ட் (Southport) பகுதியில் கடந்த ஜூலை மாதம் 29ஆம் திகதி 17 வயது சிறுவன் ஒருவன் நடத்திய வன்முறை தாக்குதலுக்கு பிறகு ஒட்டுமொத்த பிரித்தானியாவிலும் கலவரங்கள் வெடித்துள்ளன.
சௌத்போர்ட்டில் ஆரம்பித்த கலவரங்கள், லிவர்பூல் (Liverpool), லண்டன் (London) மற்றும் மிடில்ஸ்பரோ (Middlesbrough) போன்ற முக்கிய நகரங்கள் வரை பரவி தற்போது கட்டுப்பாட்டை மீறியுள்ளன.
கைது நடவடிக்கை
இந்நிலையில், போராட்டத்தில் வன்முறையை மேற்கொண்ட கலவரக்காரர்களை பிரித்தானிய பொலிஸார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில், சந்தர்லாந்து (Sunderland) பகுதியில் வன்முறையில் இறங்கிய குடியேற்ற எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: ரெட் கார்டுடன் வெளியேறும் பாரு, கம்ருதின்... விஜய் சேதுபதியால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அரங்கம் Manithan
பிரசவ வலியால் துடித்த கனேடிய பெண்: பனிப்புயலை பொருட்படுத்தாமல் இந்திய சாரதி செய்த உதவி News Lankasri
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam