பிரித்தானியாவின் கருத்துக்கு இஸ்ரேல் கடும் அதிருப்தி: வலுக்கும் கண்டனம்
இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்தும் பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவை அந்நாட்டு பிரதமர் அலுவலகம் கடுமையாக சாடியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தின் வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி நேற்று, இஸ்ரேலுக்கான 350 ஆயுத ஏற்றுமதி உரிமங்களில் 30 ஐ இடைநிறுத்துவதாக தெரிவித்திருந்தார்.
With or without British arms, Israel will win this war and secure our common future.
— Prime Minister of Israel (@IsraeliPM) September 3, 2024
சர்வதேச ஆபத்து
சர்வதேச சட்டத்தை மீற இந்த உபகரணங்கள் பயன்படுத்தப்படலாம் என்ற ஆபத்து இருப்பதாக அவர் மேற்கோள்காட்டி இந்த அறிவிப்பை வெளிப்படத்தினார்.
இடைநிறுத்தப்பட்ட உபகரணங்களில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களுக்கான பாகங்கள் அடங்கும் என அவர் கூறியிறுந்தார்.
மேலும், இது முழு ஆயுதத் தடையல்ல என்றும் லாமி கூறியுள்ளார்.
இந்நிலையில் இதற்கு பதில் வழங்கியுள்ள இஸ்ரேல்,
"மிளேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிராக தன்னைக் காத்துக் கொள்ளும் ஜனநாயக நாடான இஸ்ரேலுடன் நிற்பதற்குப் பதிலாக, பிரித்தானியா மேற்கொண்டுள்ள தவறான முடிவு ஹமாஸைத் தைரியப்படுத்தும்.
நியாயமான வழி
இஸ்ரேல் நியாயமான வழிகளில் ஒரு நியாயமான போரைத் தொடர்கிறது. நாஜிகளுக்கு எதிரான வீரமிக்க நிலைப்பாடு இன்று நமது பொதுவான நாகரீகத்தைப் பாதுகாப்பதில் இன்றியமையாததாகக் காணப்படுவது போல, ஹமாஸ் மற்றும் ஈரானின் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான இஸ்ரேலின் நிலைப்பாட்டை வரலாறு தீர்மானிக்கும்” என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை மீட்கும் ஒப்பந்தத்தை மேற்கொள்ள நெதன்யாகு போதுமான அளவு செயல்படவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.
மேலும், ஹமாஸ் அழிக்கப்படுவதற்கு முன் நிரந்தர போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டால், கூட்டணி அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாக நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டணி கட்சிகள் அச்சுறுத்தியுள்ளன.
Days after Hamas executed six Israeli hostages, the UK government suspended thirty arms licenses to Israel.
— Prime Minister of Israel (@IsraeliPM) September 3, 2024
சொந்த அரசியல் வாழ்வு
எனவே, நெதன்யாகு தனது சொந்த அரசியல் வாழ்வுக்கு முன்னுரிமை அளித்து, அமைதி ஒப்பந்தத்தைத் தடுப்பதாக பலர் குற்றம் சாட்டுகின்றனர்.
இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக, இறந்துவிட்டதாக கருதப்படும் 33 பேர் உட்பட, இன்னும் பிடியில் உள்ள 97 இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்ற ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் மத்தியஸ்தர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
இவ்வாறான பின்னணியில் பிரித்தானியாவின் அறிவிப்புக்கு இஸ்ரேல் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |