பிரித்தானியாவை கடுமையாக எச்சரிக்கும் ரஷ்யா
உக்ரைனுக்கு நீண்ட தூர இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை வழங்கும் பிரித்தானியாவின் முடிவு போர் நிலைமையை மேலும் தீவிரப்படுத்தும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.
பிரித்தானிய பாதுகாப்பு துறை செயலாளர் பென் வாலஸ்(Ben Wallace) சமீபத்தில், உக்ரைனுக்கான ஏவுகணைகளை பிரித்தானிய விரைவில் ஒப்படைக்கும் என தெரிவித்திருந்தார்.
இதன் மூலம், உக்ரைனிய ஆயுதப் படை ரஷ்யாவின் தொடர் வன்முறைகளில் இருந்து தங்களை சிறப்பான முறையில் தற்காத்துகொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ரஷ்யாவின் எச்சரிக்கை
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ரஷ்யாவிற்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக தேவையான அனைத்து எதிர் நடவடிக்கைகளையும் எடுக்க மாஸ்கோவுக்கு உரிமை உள்ளது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Ukraine is extremely grateful for the long-range Storm Shadow missiles we've been give by the United Kingdom to defend our territory and people. Here's why they're pretty impressive ? pic.twitter.com/dTFx1Bb0w4
— UNITED24.media (@United24media) May 12, 2023
அத்துடன் 250 கி.மீ வரை சென்று தாக்க கூடிய உயர் துல்லிய ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவது என்பது, உக்ரைனுடனான மோதலில் பிரித்தானியாவின் முன்னோடி இல்லாத ஈடுபாட்டை காட்டுகிறது என்றும் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் சிறப்பு இராணுவ நடவடிக்கை நடைபெறும் பகுதியில் நிலைமை தீவிரப்படுத்தும் விதமாக உக்ரைனின் ஆயுத எண்ணிக்கையை உயர்த்தும் பிரித்தானியாவின் மற்றொரு நடவடிக்கையால் வருத்தமடைவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |