புகலிடக்கோரிக்கையாளர்களை வைத்து பிரித்தானியா செய்யும் சதி
புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்ப பிரித்தானியா முயன்று வருகின்றது.
ஆனால், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்துவது சட்டவிரோதம், அது பாதுகாப்பான மூன்றாவது நாடு அல்ல என தீர்ப்பளித்துவிட்டார்கள். பிரித்தானிய அரசு ருவாண்டாவை பாதுகாப்பான நாடு என்கிறது.
இதேவேளை ருவாண்டா நாட்டவர்களுக்கு பிரித்தானிய புகலிடம் வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பிரித்தானிய அரசு கூறுவதுபோல் ருவாண்டா பாதுகாப்பான நாடாக இருக்குமானால், அந்த நாட்டவர்கள் ஏன் பிரித்தானியாவில் புகலிடம் கோர வேண்டும் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
சொந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை
2020ஆம் ஆண்டிலிருந்து, பிரித்தானியா சுமார் 40 ருவாண்டா நாட்டவர்களுக்கு புகலிடம் வழங்கியுள்ளமை அதிகாரப்பூர்வ தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.
2011க்கும் 2021க்கும் இடையில், தங்கள் சொந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று கூறி புகலிடம் கோரிய 37 ருவாண்டா நாட்டவர்களுக்கு பிரித்தானியா புகலிடம் வழங்கியுள்ளது.
ருவாண்டா பாதுகாப்பான நாடு என பிரித்தானிய அரசு கூறுகிறது. ஆனால், பிரித்தானிய உள்துறை அமைச்சகம் ருவாண்டா பாதுகாப்பான நாடு அல்ல என்பதை அங்கீகரித்துள்ளது.
அப்படியானால், ருவாண்டா நாட்டவர்களுக்கே ருவாண்டா பாதுகாப்பான நாடு அல்ல என்றால், மற்ற நாட்டவர்களுக்கு மட்டும் அது எப்படி பாதுகாப்பான நாடாக இருக்கும் என்பது எனக்கு புரியவில்லை என புலம்பெயர்தல் நிபுணரும், Durham பல்கலைப் பேராசிரியருமான Thom Brooks கூறியுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
