ட்ரம்ப்புக்கு எதிராகவும் பேச தயார்..! பிரித்தானியா பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் அதிரடி
பிரித்தானியாவின் தேசியப் பாதுகாப்பையும், உரிமைகளையும் பாதுகாக்க தேவைப்பட்டால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராகவும் பேச தயாராக இருப்பதாக பிரித்தானிய புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார்.
பதவியேற்ற பின்னர், சர்வதேச ஊடகமொன்று வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிராகவும் பேச தயார்..
அவர் மேலும் தெரிவிக்கையில்,
டொனால்ட் ட்ரம்புடன் தனது முதல் தொலைபேசி உரையாடல் மிகவும் சுமுகமாக இருந்தது.

உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், சூழ்நிலைகளுக்கு ஏற்ப நாம் முடிவுகளை எடுக்க வேண்டும்.
பிரித்தானியாவுக்கு எது சரி என்று நான் உணரும் போதெல்லாம், ட்ரம்பின் கருத்திலிருந்து மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவும், அதனை வெளிப்படுத்தவும் தயங்க மாட்டேன்.
எந்தவொரு தலைவரும் முதலில் தங்களது நாட்டின் தேசிய நலன்களைப் பாதுகாக்க வேண்டும். அந்தப் பொறுப்பை முறையாக நிறைவேற்றுவதற்கு அதுவே அவசியம். ட்ரம்ப் ஈரானுடன் உருவாக்கியுள்ள மோதல் சூழ்நிலை கவலையளிக்கின்றது என்றார்.