பிரித்தானியாவின் தற்போதைய கோவிட் - 19 நிலவரம்! வெளியான அறிவிப்பு
பிரித்தானியாவில் கோவிட் - 19 பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், 6,753 பேர் பாதிக்கப்பட்டதோடு 181 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கோவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை 4,241,677 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 125,168 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 768,020 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 1,237 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 3,348,489 பேர் பூரண குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரித்தானியாவின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் கோவிட் -19 வழக்குகளின் வீதம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக அந்நாட்டு பொது சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், பிரேசிலில் மாறுபாட்டின் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் நால்வர் பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.