பிரித்தானியாவின் கோவிட் - 19 நிலவரம்! - ஐந்து பகுதிகளில் வேகமாக பரவும் நோய் தொற்று
பிரித்தானியாவில் கோவிட் - 19 பரவல் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய புள்ளி விபரங்களுக்கு அமைய 104 பகுதிகளில் நோய் தொற்று பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 209 பகுதிகளில் நோய் தொற்று பரவும் வீதம் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, Derbyshire Dales பகுதியில் கோவிட் - 19 பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் 100,000ற்கு 56.7 ஆக காணப்பட்ட தொற்று விகிதம் தற்போது 153.5-ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக North East Lincolnshire இல் கோவிட் பாதிப்பு 101.5 இல் இருந்து 149.8 ஆகவும், North Lincolnshire இல் 81.3 இல் இருந்து 122.5-ஆகவும், Blackburn with Darwen 90.2 இல் இருந்து 128.9-ஆகவும், Melton 44.9 இல் இருந்து 82.0 ஆகவும் உயர்ந்துள்ளது.
இங்கிலாந்தில் இருக்கும் Hull மிக உயர்ந்த விகிதத்தைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 444 புதிய கோவிட் - 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 100,000 பேரில் 170.9- பேர் பாதிக்கப்படுகின்றனர் என்பதற்கு சமம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக இந்த எண்ணிக்கை 148.6 ஆக காணப்பட்டது. Northamptonshire இல் உள்ள Corby இல் பரவும் வீதம் 134.3ல் இருந்து 162.0 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக Worcestershire-ல் உள்ள Redditch-ல் பாதிப்பு வீதம் 140.7 இல் இருந்து 157.2 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக இங்கு 134 கோவிட் - 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போதும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பிரித்தானியாவில் மேலும் 110 பேர் கோவிட் - 19 தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து அங்கு கோவிட் - 19 தொற்றுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 125,690 ஆக உயர்ந்துள்ளது.
உலகளவில் கோவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை 4,268,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 594,400 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 1,016 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 3,548,731 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
இதனிடையே, பிரித்தானியாவில் சுமார் 24.5 மில்லியன் மக்கள் தற்போது கோவிட் - 19 தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொண்டுள்ளதாகவும், 1.6 மில்லியனுக்கும் அதிகமானோர் இரண்டாவது டோஸைக் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.