பலஸ்தீனம் தொடர்பில் பிரித்தானியாவின் முக்கிய அறிவிப்பு இன்று
பலஸ்தீன நாட்டை அங்கீகரிக்கும் அறிவிப்பை பிரித்தானிய பிரதமர், கெய்ர் ஸ்டார்மர் இன்று(21.09.2025) பிற்பகல் வெளியிடுவார் என்று சர்வதேச நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, காசாவில் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவேண்டும், இரண்டு அரசுகள் தீர்வை வழங்கவேண்டும் என்று நிபந்தனைகளை, பிரித்தானிய பிரதமர் கோரியிருந்தார்.
இந்த நிபந்தனையை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால், செப்டம்பரில், பிரித்தானியா, பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் தீர்மானத்தை வெளியிடும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
நிலைப்பாடு
இதன் அடிப்படையிலேயே இன்றைய அறிவிப்பு வெளியாகவுள்ளது. எனினும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த நிலைப்பாட்டை கண்டித்துள்ளார்.
அத்துடன் பிரித்தானியாவின் இந்த நிலைப்பாடு, அது பயங்கரவாதத்துக்கு பரிசளிக்கும் செயற்பாடாகவே இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்! உலகின் அதிபதியாக உருவெடுக்க போகும் முக்கிய நபர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




