பிரித்தானியா - வோல்தம்ஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்திருவிழா
பிரசித்தி பெற்ற லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பகபதி கற்பக விநாயகர் ஆலயத்தின் 22வது மகோற்சவ பெருவிழா கடந்த 28-08-2023 திங்கட்கிழமை ஆரம்பமானது.
கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ விழாவின் தேர்திருவிழாவானது இன்று(10-09-2023) காலை 9.00 மணியளவில் இடம்பெறவுள்ள வசந்த மண்டப பூஜையினை தொடர்ந்து பகல் 11.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.
வருடந்தோறும் தாயக மற்றும் தமிழ்நாடு நாதஸ்வர தவில் வித்துவான்களின் இசை வாத்தியங்கள் முழங்க இடம்பெரும் விழா நிகழ்வில் பிரபல ஆன்மீக அறிஞர்களின் சிந்தனைக்கருத்துகளும் பிரசங்கமாக நிகழ்வதோடு கலைநிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது.

விநாயகர் நிமஜ்ஜனப் பெருவிழா
மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கலந்துகொள்ளவுள்ளார்.

பல்வேறு வர்த்த்க பெருமக்களின் அனுசரணையுடன் அன்னதான வைபவமும் இடம்பெறவுள்ளது. மேலும் சதுர்த்தி கலாரூப விநாயகர் நிமஜ்ஜனப் பெருவிழாவும் சிறப்புற இடம்பெறவுள்ளது.
இதன்போது எதிர்வரும் 24.09.2023 அன்று எம்பெருமான் விநாயகரின் தேரானது ஆலயத்தில் இருந்து புறப்பட்டு கடற்கரையில் 10.00 மணி முதல் நிமஜ்ஜன வழிபாடு, தீபாராதனை, அர்ச்சனை நிகழ்வுகள் இடம்பெற்று நிமஜ்ஜனமும் தொடர்ந்து மகா பிரசாதமும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri