இலங்கையுடன் இணைந்து செயற்படுகின்றோம்! - பிரித்தானியா அறிவிப்பு
இலங்கையுடன் இணைந்து காலநிலை நடவடிக்கைக்கான உறுதிமொழிகளை நிறைவேற்றுவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லிசா வான்ஸ்டால் (Lisa Whanstall இதனை தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய அரசாங்கம் காலநிலை தொடர்பான COP26 மாநாட்டை கிளாஸ்கோவில் நடத்தியது. இதில் இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரித்தானியா நடத்திய உலகத் தலைவர்களின் மிகப்பெரிய கூட்டமாக காலநிலை உச்சி மாநாடு இருந்தது.
பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான ஐ.நா. கட்டமைப்பு மாநாடு (UNFCCC) ஆகியவற்றின் இலக்குகளை நோக்கி நடவடிக்கையை துரிதப்படுத்த இது உலக நாடுகளை இந்த மாநாடு ஒன்றிணைத்தது.
இதில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டு காலநிலை மாற்றம் தொடர்பில் கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, இலங்கையுடன் இணைந்து காலநிலை நடவடிக்கைக்கான உறுதிமொழிகளை நிறைவேற்றுவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. இது குறித்து பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
“காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் பேரழிவை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டார். தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
பாரிஸ் ஒப்பந்தத்தை நிறைவு செய்து செயல்படுத்துவதன் மூலம், இந்த முக்கியமான சவாலை எதிர்கொள்ள உலகம் நாடுகள் ஒன்றுபட முடியும்.” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், காலநிலை நடவடிக்கை உறுதிமொழிகளை நிறைவேற்ற பிரித்தானிய இலங்கையுடன் இணைந்து செயல்படுகிறது”. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
