பிரித்தானியாவில் நத்தார் மரங்களுக்கு கடும் தட்டுப்பாடு! - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவில் இந்த ஆண்டு நத்தார் மரங்களுக்கு (Christmas tree) கடும் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரெக்ஸிட் மற்றும் தொற்றுநோய்க்குப் பிறகு நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் சமீபத்திய பாதிப்பாக இது இருக்கக்கூடும் என்று விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஊழியர் பற்றாக்குறை நாட்டிற்குத் தேவையான மில்லியன் கணக்கான மரங்களை அறுவடை செய்வதை கடினமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலம் நெருங்குவதால் பொருட்களை விரைவாக பெற்றுக்கொள்ளும்படி மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு உண்மையான நத்தார் மரங்களை பெற்றுக்கொள்வது பெரும் சவாலாக இருக்கும் என பிரித்தானியாவில் நத்தார் மரங்களை விற்பனை செய்யும் Mark Rofe தெரிவித்துள்ளார்.
பிரெக்ஸிட்டிற்கு பிந்தைய புதிய விதிமுறைகள் இங்கிலாந்திற்கு மரங்களை இறக்குமதி செய்வதை மிகவும் கடினமாக்கியுள்ளது. இது இங்கிலாந்தில் வளர்ந்த மரங்களுக்கான தேவையை அதிகரித்துள்ளது.
"நாங்கள் இது குறித்து இங்கிலாந்தில் நத்தார் மரம் வளர்ப்பவர்களிடம் பேசினோம், அவர்கள் அனைவரும் ஒரே சவால்களை எதிர்கொள்கிறார்கள்" என்று Mark Rofe கூறியுள்ளார்.
பிரித்தானியா நத்தார் மரம் வளர்ப்போர் சங்கத்தின் தகவல் படி, ஒவ்வொரு ஆண்டும் 8 முதல் 10 மில்லியன் உண்மையான கிறிஸ்துமஸ் மரங்கள் இங்கிலாந்தில் விற்கப்படுகின்றன.
அத்துடன், இங்கிலாந்து வழக்கமாக ஐரோப்பாவிலிருந்து 1 மில்லியன் முதல் 3 மில்லியன் வரை மரங்களை இறக்குமதி செய்யும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் தொழிலாளர் சந்தையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறைகள் மரங்களை அறுவடை செய்வது மற்றும் கொண்டு செல்வது ஆகிய இரண்டு செயற்பாட்டையும் பாதித்துள்ளது” என Mark Rofe குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய ஆண்டுகளில் அவர்கள் வனத்துறையினரை நம்பியிருந்தனர், பெரும்பாலும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து அறுவடைக்கு வருவார்கள், பின்னர் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்புவார்கள், ஆனால் பிரெக்ஸிட் மாற்றத்தால் அவர்களால் இப்போது வேலைக்கு வர முடியவில்லை.
மேலும் கடந்த கிறிஸ்துமஸிலிருந்து மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது, சில அத்தியாவசியப் பொருட்களின் விலை இரட்டிப்பாகியுள்ளது. உரம் உள்ளிட் பொருட்களில் விலையில் அதிக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் போக்குவரத்து செலவுகள் 20 முதல் 60 வீதம் வரை அதிகரித்துள்ளது. இந்த பண்டிகைக் காலத்தில் ஒரு உண்மையான நத்தார் மரத்தை வாங்குவது மிகவும் சவாலானதாக இருக்கும்,
இருப்பினும் உங்களால் ஒன்றைப் பெற முடிந்தால், முந்தைய ஆண்டுகளில் நீங்கள் செலுத்தியதை விட அதிக பணம் செலுத்த நேரிடும்.
மொத்த விற்பனை விலை இந்த ஆண்டு மட்டும் 5 முதல் 10 வீதம் வரை அதிகரித்துள்ளது என Mark Rofe மேலும் கூறியுள்ளார்.