விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில் இலங்கை அரசுக்கு பிரித்தானியா வழங்கிய தகவல்
பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாக இருந்துவந்த தமிழீழ விடுதலைப்புகள் அமைப்பின் மீதான தடை, தொடர்ச்சியாக நீடிக்கும் என பிரித்தானிய உள்துறை அமைச்சர் முடிவு செய்துள்ளதாக இலங்கை அரசிடம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
பயங்கரவாதிகளுக்கு எதிரான சட்டம் 2000, சரத்து 7ன் கீழ் நிறைவேற்றப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையினை மீளப்பெறுமாறு தாக்கப்பட்ட விண்ணப்பத்தினை ஆராய்ந்த பிரித்தானிய உள்துறை அமைச்சர், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ச்சியாக அமுலில் இருக்கும் என முடிவு எடுத்துள்ளார். அம்முடிவானது தமக்கு பிரத்தியோகமாக அறிவிக்கப்படுள்ளது என ஸ்ரீலங்கா வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வறிக்கையில் , பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஐக்கிய இராச்சியம் மற்றும் அனைத்து அரசாங்கங்களுடனான கூட்டுறவை இலங்கை அரசாங்கம் பாராட்டுவதுடன், குடிமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலையும், உலகளாவிய மற்றும் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தையும் விளைவிக்கும் பயங்கரவாதம் மற்றும் வன்முறைத் தீவிரவாதத்தைத் தணிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு உறுதிபூண்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் குறித்த தடையை நீடிப்பது தொடர்பில் பிரித்தானியா அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan