நாட்டை விட்டு வெளியேறும் இராணு அதிகாரிகள்: பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!
பிரிகேடியர் உட்பட 13 இலங்கை இராணுவ அதிகாரிகள் தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்று நாடு திரும்பவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து, கடவுச்சீட்டைப் பெறுவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு இலங்கை படை உறுப்பினர்கள், அந்தந்த படைப்பிரிவுத் தளபதிகளின் அனுமதியைப் பெற வேண்டும் என்று எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டை விட்டு வெளியேறும் இராணு அதிகாரிகள்
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கும் விளக்கமளித்துள்ளது.
இராணுவ சேவையை விட்டு வெளியேறி, திறமையான அதிகாரிகள் உட்பட பெரும்பாலான அதிகாரிகள் வெளிநாடு செல்ல ஆரம்பித்துள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இலங்கை இராணுவத்தின் ஆட்பலத்தைக் குறைக்க வேண்டும் என்ற சர்வதேச மட்ட
விருப்பத்தின்; விளைவே இது என்று ஊடகமொன்று செய்தி தெரிவித்துள்ளது.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
