மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்
மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல்ஸ் டீபன்ஸ், மற்றும் அவரது குழுவினர் சிவில் சமூக ஆர்வலர்களை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது இன்று (31.08.2023) மட்டக்களப்பு தனியார் விடுதியில் இடம்பெற்றுள்ளது.
ஆயுத முரண்பாடுகளுக்கு முன்னரும் ஆயுத முரண்பாடுகளின் போதும் தற்போதைய ஆயுத முரண்பாடுகள் முடிவுற்ற நிலையிலும் சமூகங்களுக்கிடையிலான சவால்கள், நெருக்கடிகள் சகவாழ்வின் சீர்குலைவு பற்றி அங்கு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
காணிப் பிரச்சினைகள்
குறிப்பாக மட்டக்களப்பில் உள்ள காணிப் பிரச்சினைகள் குறித்து அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் சிவில் சமூக ஆர்வலர்கள் விவரித்துள்ளனர்.
மேலும், சமூகங்களுக்கிடையில் நிலவ வேண்டிய சகவாழ்வின் முக்கியத்துவம் குறித்தும் அங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிவில் சமூக ஆர்வலர்கள் சார்பில் கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எம்.புஹாரி முஹம்மத், சிவில் சமூகசெயற்பாட்டாளரும் சட்டத்தரணியும் சகவாழ்வு மையத்தின் ஸ்தாபக சிந்தனையாளருமான ஏ.உவைஸ், சிவில் சமூகசெயற்பாட்டாளரும் சமூகஆய்வு எழுத்தாளரும் சுதந்திர ஊடகவியலாளரும் வளவாளருமான ஏ.எச்.ஏ. ஹுஸைன், செயற்பாட்டாளர் முஹம்மத் லியாப்தீன் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam