இலங்கை - இந்தியா பாலம் ரணிலின் முன்மொழிவே: வினய் மோகன் குவாத்ரா பகிரங்கம்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நில இணைப்பு குறித்து முதலாவதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே முன்மொழிந்தார் என இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்துள்ளார்.
மேலும், ரணில் விக்ரமசிங்கவே 2002 மற்றும் 2004 க்கு இடையில் பிரதமராக இருந்தபோது இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கான முன்மொழிவைக் கொண்டு வந்தார் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் புதுடில்லியில் நேற்று (21.07.2023)நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர், இந்திய இலங்கை இணைப்புத் திட்டங்களைப் பொறுத்தவரை இலங்கை ஜனாதிபதியினால் இந்த யோசனை முன்மொழியப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
நில இணைப்பு தொடர்பான யோசனை
இந்த வியடத்தில் இரண்டு நாட்டு தலைவர்களும் இதனை முன்னோக்கி எடுத்துச் செல்ல
ஒப்புக்கொண்டனர் எனவும் இரு நாடுகளுக்கும் இடையிலான நில இணைப்பு குறித்து ஆரம்ப
சாத்தியக்கூறு ஆய்வின் மூலம் இரு தரப்பும் அதை முன்னெடுத்துச் செல்ல
இணங்கியுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார செயலாளர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |