பிரிக்ஸ் மாநாட்டில் இலங்கையும் பங்கேற்பு: ஜனாதிபதி பங்கேற்க மாட்டார்
ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பின் பேரில் அக்டோபர் 22-24 வரை நடைபெறவுள்ள பிரிக்ஸ் (பிரேசில், ரஸ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா) உச்சிமாநாட்டில் இலங்கையின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார்
எவ்வாறாயினும், தேசிய மக்கள் சக்தியின் அரசியல் தலைமைகள் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதால் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவின் பொருளாதார ரீதியாக செல்வந்த நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார சக்திக்கு சவால் விடும் வகையில் பொருளாதார ரீதியாக வளரும் நாடுகளை ஒன்றிணைக்க பிரிக்ஸ் உருவாக்கப்பட்டது.
அந்த வகையில் 2024 பிரிக்ஸ் மாநாட்டிற்கு ரஸ்யா தலைமை வகிக்கிறது.
ரணில் அரசாங்கத்தின் பரிந்துரை
இதில் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் ரஸ்ய தூதுவர் ஏற்கனவே கையளித்திருந்தார்.

இதற்கிடையில் ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவை பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராக விண்ணப்பிக்க பரிந்துரைத்தது. எனினும் உறுப்பினர் சேர்க்கை இன்னும் நிலுவையில் உள்ளது.
இதேவேளை பிரிக்ஸ் அமைப்பின் புதிய உறுப்பு நாடுகளாக எகிப்து, ஈரான், எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்பன இணைந்துள்ளன.
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்... எங்கே பாருங்க போட்டோஸ் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri