மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவர் கைது
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் நெருங்கிய சகாவும் முன்னாள் ஊடகத்துறை அமைச்சின் செயலாளரும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான அனுஷ பெல்பிட்டவை, எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அனுஷ பெல்பிட்ட, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று காலை கைது செய்யப்பட்டமையைத் தொடர்ந்து, கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் பிற்பகல் பிரசன்னப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
46 மில்லியன் ரூபாவை எவ்வாறு சம்பாதித்தார் என்பதை வெளியிடத் தவறியமைக்காக அனுஷ பெல்பிட்ட இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காலத்தில் பல முக்கிய பதவிகளை வகித்த அனுஷ பெல்பிட்ட இன்று (23.01.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குவின் முன்னாள் அதியட்சகரும்,லேக்ஹவுஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான அனுஷ பெல்பிட்ட , இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோசடியாக சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டு
இவர் ஊகத்துறை அமைச்சின் செயலாளராகவும் இருந்துள்ளார்.
நாற்பத்தாறு மில்லியன் ரூபாய் பணத்தை எவ்வாறு சம்பாதித்தார் என்பதற்கான தகவல்களை வெளியிடத் தவறியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, அவர் இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் பிரிவு 23 (அ) 1 இன் கீழ் மோசடியாக சொத்துக்களை சம்பாதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam