நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய உண்டியல் உடைப்பு - விசாரணையில் மூவர் கைது
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய உண்டியலை உடைத்து சுமார் 21 இலட்ச ரூபாய் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(06.05.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் காலை ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு ஆலய நிர்வாகத்தால் முறைப்பாடு வழங்கப்பட்டதையடுத்து துரித கெதியில் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் மூவர் கைது
இதன்போது, குறிகட்டுவான் பகுதியில் இருந்து இரண்டு பேரும், நயினாதீவு பகுதியில் இருந்து ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்து உண்டியல் காசு 21 இலட்ச ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாகவும், கைதான மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், 16,17 மற்றும் 27 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.