பாண் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
பாண் விலை குறைக்கப்படமாட்டாது என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
பாண் விலையில் இன்று (15.06.2023) திருத்தம் செய்யப்படவிருந்த போதிலும், விலையில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாண் ஒரு இறாத்தலின் சில்லறை விலை 150 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெதுப்பக உற்பத்திகளின் விலையில் மாற்றம் இல்லை

முன்னதாக சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்ட போதிலும் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலையில் மாற்றம் ஏற்படுத்த முடியாது என அகில இலங்கை வெதுப்பக உற்பத்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்திருந்தார்.
நாடளாவிய ரீதியில் உள்ள வெதுப்பகங்களில் 25 சதவீதமானோரே சமையல் எரிவாயு மூலம் வெதுப்பக உற்பத்திகளை மேற்கொள்கின்றனர் எனவும் இதனால் வெதுப்பக உணவு உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கமுடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam