159 ஆண்டுகள் பழமையான பாண் தொடர்பான சட்டத்தை இரத்து செய்ய அனுமதி
இலங்கையில் சுமார் 159 ஆண்டுகள் பழமையான சட்டத்தை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபைக் கட்டளைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது பாண் கட்டளைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்காலத்திற்கு பொருத்தமற்ற சட்டம்
பாண் விற்பனையை ஒழுங்குபடுத்தல், விற்பனை செய்யப்படும் பாணுக்கு பழுதடைந்த கோதுமை மாவை கலப்பதனை தடுத்தல் ஆகியனவற்றை நோக்கமாகக் கொண்டு 1864ம் ஆண்டு இந்த பாண் கட்டளைச் சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த சட்டம் தற்காலத்திற்கு பொருத்தமற்றது என்ற காரணத்தினால் அந்த சட்டத்தை ரத்து செய்வதற்கான யோசனை வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு நளின் பெர்னாண்டோவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |