உலகின் நான்காவது மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் அதிபராக லுலு டா சில்வா தெரிவு!
உலகின் நான்காவது மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் நடந்த அதிபர் தேர்தலில் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றுள்ளார்.
தமது வெற்றி தொடர்பில் லூலா டா சில்வா தெரிவித்ததாவது,
"அவர்கள் என்னை உயிருடன் புதைக்க முயன்றனர், நான் இங்கே இருக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார். அத்துடன் தனது வெற்றியை அரசியல் "உயிர்த்தெழுதல்" என்று விவரித்துள்ளார்.
கடும் போட்டி
இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ மீண்டும் போட்டியிட்டார்.
தீவிர வலதுசாரியான ஜெயீர் போல்சனரோவுக்கும், முன்னாள் அதிபரும் இடதுசாரி வேட்பாளருமான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கும் இடையில்தான் அதிபர் தேர்தலுக்கான போட்டி நடைபெற்றது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் சில்வாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவித்தன.
கோவிட் தொற்றை கையாண்ட முறை, அமேசான் மழைக்காடுகள் அழிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஜெயீர் போல்சனரோ அரசாங்கம் மக்களிடம் கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டதால் இந்த தேர்தலில் அவரது வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாக இருந்தது.
50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள்
பிரேசில் தேர்தல் நடைமுறையின் படி அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரேசில் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் இடதுசாரி தலைவரும், முன்னாள் அதிபருமான லுலு டா சில்வா 50.90 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் பிரேசில் அதிபராக வெற்றிபெற்றுள்ளார்.
தற்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ 49.10 சதவீத வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.
பதவி ஏற்பு
மேலும் புதிய அதிபராக தேர்வான லுலு டா சில்வா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பதவியேற்க உள்ளார்.
லூலா டா சில்வாவின் வெற்றி தனிப்பட்ட அரசியல் மறுபிரவேசத்தை குறிப்பிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லூலா டா சில்வா தொடர்ச்சியான ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக 580 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த தண்டனைகள் பின்னர் உச்ச நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டது,
இந்நிலையிலே அவருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
May you like this Video





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
