பாரதியாரின் கொள்ளுப்பேரன் நாளை மட்டக்களப்புக்கு வருகை!
மஹாகவி பாரதியாருடைய கொள்ளுப்பேரன் கலாநிதி.இராஜ்குமார் பாரதி நாளைய தினம் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்திற்கு வருகைதர இருக்கின்றார்.
செப்டம்பர் மாதம் 11ஆந்திகதி பாரதியாரின் நினைவு நாளாகும்.
இந்நிகழ்வினை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 04ஆந்திகதி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் மஹாகவி பாரதியாருடைய கொள்ளுப்பேரன் கலாநிதி.இராஜ்குமார் பாரதி அவர்கள் வருகைத்தர இருக்கின்றார்கள்.
நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி அவர்களது தலைமையில் நிகழவிருக்கும் இந்நிகழ்வுக்கு, ஆன்மீக அதிதியாக வணக்கத்துக்குரிய நீலமாதவனானந்தஜீ மஹராஜ் அவர்களும் முன்னிலை அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா.செல்வராசா அவர்களும் பிரதம அதிதியாக கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் அவர்களும் சிறப்பு அதிதியாக இளைப்பாறிய பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.
இந்நிகழ்வில் பாரதியாருடைய கவி வரிகளில் உருவாக்கப்பட்ட பாடல்களுக்கு இசையூட்டப்பட்டு இசை ஆற்றுகைகளாகவும் நடன ஆற்றுகைகளாகவும் இடம்பெறக் காத்திருக்கின்றன.
அத்தோடு, அன்றைய நாளில் மஹாகவி பாரதியாருடைய கொள்ளுபேரனாகிய கலாநிதி.இராஜ்குமார் பாரதி அவர்களின் மட்டக்களப்பு வருகையைத் தடம்பதிக்கும் முகமாக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் முன்னால் அமைந்துள்ள பிரதான வீதியில் சுவாமி விபுலானந்தரினால் ஆராய்ச்சி செய்யப்பட்ட யாழ் ஒன்றும் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
ஒவ்வொரு நாளும் முரண்பாடான பேச்சு- ஈரான் போரில் ட்ரம்ப் நிலைப்பாட்டை விமர்சித்த மேக்ரான் News Lankasri
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri