லங்கா பிரீமியர் லீக்கின் விளம்பர தூதராகும் சர்வதேச புகழ் பெற்ற வீரர்
லங்கா பிரீமியர் லீக் 2026ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள அதன் ஆறாவது பருவத்துக்கான விளம்பரத் தூதராக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் நட்சத்திரம் கிறிஸ் கெய்லை நியமித்துள்ளது.
2025 பதிப்பு இரத்து செய்யப்பட்ட நிலையில், 6 ஆவது பருவத்தில் பெரிய மறுமலர்ச்சியைக் குறிக்கும் வகையில் லங்கா பிரீமியர் லீக் 2026 முன்னெக்கப்படும் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முதன்மையான 20க்கு20 போட்டி
2020 இல் தொடங்கப்பட்ட லங்கா பிரீமியர் லீக், இலங்கையின் முதன்மையான 20க்கு20 போட்டியாக வளர்ந்துள்ளது.

வளர்ந்து வரும் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுடன் சர்வதேச நட்சத்திர சக்தியையும் இது எடுத்துக்காட்டுகிறது.
இந்தநிலையில் கெய்ல் விளம்பரத் தூதராக நியமிக்கப்படுவது, சர்வதேச கவனத்தையும் இரசிகர் ஈடுபாட்டையும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
எனினும் லங்கா ப்ரீமியல் லீக் போட்டிகளுக்கான சரியான போட்டி அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |