காலி முகத்திடல் போராட்டக்களத்தின் கிளை: பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
களுத்துறையில் அமைக்கப்பட்டுள்ள காலி முகத்திடல் போராட்டக்களத்தின் கிளையை (கோட்டா கோ கம) ஒருமணிநேரத்திற்குள் அகற்றுமாறு அங்குள்ள பொலிஸார் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் இன்று அதிகாலை காலிமுகத்திடல் பகுதியில் இராணுவம், பொலிஸ் விசேட அதிரடி படையினர் போராட்டப் பகுதிக்குள் பிரவேசித்து போராட்டக்காரர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
இதனால் அங்க பதற்றமான சூழல் ஏற்பட்டதுடன், போராட்டக்காரர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் என பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காலிமுகத்திடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து நாட்டில் பல இடங்களில் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
போராட்டக்காரர்கள் மீதான இத் தாக்குதலுக்கு சர்வதேச சமூகம் உட்பட பல தரப்பினரும் தமது கடுமையான கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
காலிமுகத்திடலில் இருந்து திடீரென சென்ற பொலிஸார்! சிறிது நேரத்தில் குவிந்த படையினர் - நேரடி ரிப்போர்ட் (Video) |