பதவி விலக அனுமதியுங்கள்! - ஜனாதிபதிக்கு பி.பீ ஜயசுந்தர கடிதம்
ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பி.பீ.ஜயசுந்தர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது பதவிக்காலத்தில் தான் எதிர்கொண்ட பிரச்சினைகள் மற்றும் சிரமங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அவர் தனது கடிதத்தில் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஜனவரி 31ம் திகதி பதவியை இராஜினாமா செய்ய பி.பீ.ஜயசுந்தர அனுமதி கோரியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர முன்னெடுத்த சில நடவடிக்கைகளே காரணம் என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன், அவர் பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் அண்மையில் நிதி அமைச்சர், பிரதமர் உள்ளிட்டவர்கள் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri
