கழிவு நீர் கால்வாயில் சிக்கிய சிறுவன் உயிரிழப்பு
கழிவு நீர் கால்வாயில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்ட 14 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குருநாகல் பகுதியில் இன்று(05) இடம்பெற்றுள்ளது.
மக்களின் தேடல் நடவடிக்கை

குறித்த பகுதியில், கழிவு நீர் கால்வாயொன்றுக்கு அருகில் பாடசாலை பை ஒன்று இருப்பதனை கண்ட மக்கள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து கால்வாயில் பாடசாலை சிறுவன் சிக்குண்டு இருப்பதனை கண்டறிந்துள்ளனர்.
சிறுவன் மீட்பு

இதனையடுத்து, குருநாகல் காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுத்த மீட்பு நடவடிக்கைககளில் குறித்த சிறுவன் மீட்கப்பட்டு சிகிக்கைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இச் சம்பவத்தில் சசித்ர சேனாநாயக்க என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
சிறுவன் குருநாகல் மலியதேவ மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி கற்று வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri