சிறுவன் சுட்டுக்கொலை - பிரதான சந்தேகநபர் காட்டில் சிக்கினார்
அம்பாந்தோட்டை மாவட்டம், வீரகெட்டிய பிரதேசத்தில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற குழப்பம் ஒன்றின்போது 14 வயது சிறுவன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றுமொரு நபருடன் காட்டுப் பகுதியொன்றில் தலைமறைவாகி இருந்த பிரதான சந்தேக நபர், வீரகெட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
பிரதான சந்தேக நபரைக் கைது செய்த போது, கொலைக்காகப் பயன்படுத்தப்பட்டது எனக் கருதப்படும் துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதான நபர் வலஸ்முல்ல நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வீரகெட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

13 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி செய்துள்ள மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
