சிக்கலான அறுவை சிகிச்சையில் சாதனை படைத்த இஸ்ரேல் மருத்துவர்கள்

Israel World
By Renuka Jul 15, 2023 12:16 PM GMT
Report

விபத்துக்குள்ளான சிறுவனுக்கு மிகவும் அசாதாரணமான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சையைச் செய்து இஸ்ரேல் மருத்துவர்கள் அதிசயம் நிகழ்த்தியுள்ளனர்.

அண்மையில் 12 வயதான சுலைமான் அச்சன் என்ற சிறுவன், சைக்கிளைச் செலுத்திச் சென்றபோது கார் மீது மோதி தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், தசை நார்கள் கிழிந்து முதுகுத்தண்டின் மேற்பகுதியிலிருந்து அவரது மண்டை ஓடு பிரிந்து, கிட்டத்தட்ட அவனது கழுத்து துண்டான நிலையில் இருந்துள்ளது.

விபத்து ஏற்பட்ட உடனேயே அந்தச் சிறுவன் விமானம் மூலம் ஹடாசா மருத்துவ மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 

சிக்கலான அறுவை சிகிச்சையில் சாதனை படைத்த இஸ்ரேல் மருத்துவர்கள் | Boy S Decapitated Head Reattached Israeli Doctors

சிறுவனைக் காப்பாற்ற முடிந்தது

இதன்போத நீண்ட அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்கள் மிகக் கடுமையாக முயற்சி செய்து மரணத்தின் விளிம்பில் இருந்து அந்தச் சிறுவனை காப்பாற்றியுள்ளனர். 

அதாவது, துண்டிக்கப்பட்ட தலையை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் இணைத்து அசாத்தியம் படைத்துள்ளனர். 

இது தொடர்பில் சிகிச்சையை மேற்பார்வையிட்ட எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான வைத்தியர் ஒஹட் எய்னவ்  'இஸ்ரேல் டைம்ஸ்' பத்திரிகைக்குச் செவ்வி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “சிறுவனுக்கு சேதமடைந்த தலைப் பகுதியில் புதிய பிளேட்டுகள் பொருத்த வேண்டியிருந்தது.

எங்கள் மருத்துவர்களின் திறமையாலும் புதிய தொழில்நுட்பத்தாலுமே சிறுவனைக் காப்பாற்ற முடிந்தது.

சிக்கலான அறுவை சிகிச்சையில் சாதனை படைத்த இஸ்ரேல் மருத்துவர்கள் | Boy S Decapitated Head Reattached Israeli Doctors

50 சத வீதம் மட்டுமே வாய்ப்புகள்

நரம்பு, உணர்திறன் மற்றும் அசைவில் எந்தவித செயலிழப்புகளும் இல்லாமல் சிறுவன் செயல்படுவதும், இந்த அரிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு எந்தவித உதவியும் இல்லாமல் சிறுவனால் நடக்க முடிவதும் சாதாரண விடயம் அல்ல. மிகவும் அரிதானது. 

இப்படியான அறுவை சிகிச்சை செய்ய மிகவும் திறமை வாய்ந்த மருத்துவர்கள் தேவை.

இது பொதுவான அறுவை சிகிச்சை இல்லை. அதிலும் குறிப்பாகச் சிறுவர்களுக்கு இப்படியான அறுவை சிகிச்சைகள் செய்ய நேர்த்தியான அறிவும் அனுபவமும் உள்ள நிபுணர்களால் மட்டுமே முடியும்” என கூறியுள்ளார்.

சிறுவன்  பிழைப்பதற்கு 50 சத வீதம் மட்டுமே வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் முழுவதுமாக குணமடைந்திருப்பதைப் பெரிய அதிசயமாகவே மருத்துவர்கள் கருதுகின்றனர். 

சிக்கலான அறுவை சிகிச்சையில் சாதனை படைத்த இஸ்ரேல் மருத்துவர்கள் | Boy S Decapitated Head Reattached Israeli Doctors

தொடர்ந்து கண்காணிப்பு

இந்த அறுவை சிகிச்சை கடந்த மாதம் நடந்துள்ளது. ஆனால் இதைப் பற்றி மருத்துவர்கள் வெளியில் அறிவிக்காமல், சிறுவன் முற்றிலும் குணமடைந்தவுடன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.

சிறுவனுக்குக் கழுத்து மற்றும் முதுகெலும்பை நேராக வைப்பதற்கு பிரத்தியேக சாதனம் பொருத்தப்பட்டு வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவனது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US