காதலனை தேடி வந்த 13 வயது சிறுமி! 19 வயது இளைஞர் விளக்கமறியலில்
திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞரொருவரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலையில் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று முற்படுத்தப்பட்ட போதே இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கையடக்கத் தொலைபேசி மூலம் காதல்
அநுராதபுரம் - மதவாச்சி பகுதியில் வசித்து வந்த 13 வயதுடைய சிறுமியை கையடக்கத் தொலைபேசியின் மூலம் குறித்த இளைஞர் (19 வயது) காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அச்சிறுமி தனது காதலனான குறித்த இளைஞரை தேடி வந்துள்ளார் என கூறப்படுகிறது.
இளைஞர் கைது
இந்த சந்தர்ப்பத்தில் குறித்த சிறுமியை, சிறுமியின் உறவினர்களுக்கு தெரியாது வீட்டுக்கு அழைத்து வந்து தங்க வைத்துள்ளதாக குற்றம்சாட்டி இளைஞர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமி தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam
