சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் பலி - பிசிஆர் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு
வவுனியா - பம்பைமடு பகுதியில் கொட்டகை ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்த சிறுவனின் சடலம் பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் இன்று(1) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வவுனியா பம்பைமடு பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை குறித்த சிறுவன் தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் ஆட்டுக்கொட்டகையின் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் படுகாயமடைந்த குறித்த சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.
சம்பவத்தில் பம்மைமடு பகுதியைச் சேர்ந்த சுஜந்தன் கீர்த்திகன் என்ற ஒன்றரை வயது சிறுவனே மரணமடைந்துள்ளார்.
வவுனியா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.










அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
